2022-23-ம் கல்வி ஆண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்ட தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு கட்டணம் 50. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜன.,24. பிப்.,25-ல் தேர்வு நடைபெறும்.

இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வருடத்திற்கு 12000 உதவித்தொகை வழங்கப்படும். அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.