8 ஆண்டுகளாக சூப்பர் ஹிட் அடித்த சீரியல்…. முடிவுக்கு வரப்போகுதா?…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெடு தொடர்கள் என்ன தான் பிரம்மாண்டமான கதைக் களங்களுடன் ஒளிபரப்பானாலும், ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக வரவில்லை எனில் அது தோல்வியடைந்து விரைவிலேயே முடிவுக்கு வந்து விடும். அதிகமான எதிர்பார்ப்பை கிளப்பி இருந்த ஸ்டார் நடிகர்களை கொண்ட பல்வேறு சீரியல்கள் கூட துவங்கிய வேகத்திலேயே முடித்து வைக்கப்பட்டது. ஆனால் சுமார் 8 ஆண்டுகளாக ரசிகர்களை கட்டிப் போட்டு சூப்பர்ஹிட் அடித்த தொடரான சந்திரலேகா, தொலைக்காட்சி சீரியல் வரலாற்றில் புது சாதனையை படைத்திருக்கிறது.

மேலும் ஸ்பெஷல் என்னவெனில் இத்தொடரின் இறுதிஅத்தியாயம் வரையிலும் ஹீரோயினிகள் மாறவே இல்லை. சுமார் 2300 எபிசோடுகளை கடந்துள்ள இத்தொடரானது தற்போது முடிவுக்குவர உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இறுதி எபிசோடின் படப் பிடிப்பு தளத்தில் அத்தொடரின் நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து நிற்கும் புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்மை காலத்தில் தமிழ் சின்னத்திரை வரலாற்றில் இத்தனை எபிசோடுகளை கடந்த நெடுந் தொடர் எதுவுமே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. லேகாவும், சந்திராவும் பல குடும்ப பெண்களின் உறவாகவும், தோழிகளாகவும் மாறிவிட்ட நிலையில் இப்போது அவர்கள் “பேர்வல்” சொல்லி இருப்பது ரசிகர்கள் பலரையும் வருத்தமடைய செய்துள்ளது. என்ன தான் புதிது புதிதாக சீரியல்கள் வந்தாலும் மீண்டும் ஒரு சந்திரலேகாவுக்கு வாய்ப்பே இல்லை என்பது ரசிகர்கள் பலரின் ஆதங்கமாக இருக்கிறது.