அதிர்ச்சி :”7 ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்து கரண்ட் ஷாக் வைத்து கொன்ற 12 ஆம் வகுப்பு மாணவன் “திண்டுக்கலில் பரபரப்பு !!

திண்டுக்கல் அருகே 12 ஆம் வகுப்பு மாணவன் சிறுமியை பாலியல் வன்புணர்வு  செய்து மின்சாரம் செலுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

திண்டுக்கல் பகுதியை அடுத்த குரும்பபட்டி பகுதியில்  7ஆம்  வகுப்பு படித்து வந்த மாணவி,  சில நாட்களுக்கு முன்பு  வாயில் வயரை கடித்த நிலையில் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில்  ரத்த காயம் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் காவல்துறையினருக்கு  தகவல் அளித்தனர் . தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்துறையினர்  , மாணவியின் உடலை  பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் விசாரணையில் சிறுமியை பாலியல் வன்புணர்வு  செய்து மின்சாரம் செலுத்தி   கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன்  என்பது தெரியவந்துள்ளது. அதன்பின்  மாணவனை போஸ்கோ மற்றும் கொலை வழக்கில் காவல்துறையினர்  கைது செய்து விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.