75-ஆவது சுதந்திர தின விழா… வீரர்கள் பற்றிய புத்தக கண்காட்சி… ஆர்வமுடன் கலந்து கொள்ளும் பொதுமக்கள்…!!

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு புத்தக கண்காட்சி விழா நடைபெற்று வருகின்றது.

நீலகிரி மாவட்டத்தில் பொது நூலகத் துறை சார்பில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஊட்டியிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் வைத்து சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய புத்தக கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்த புத்தக கண்காட்சியை நூலக வாசகர் வட்ட மூத்த உறுப்பினர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட நூலக அலுவலர் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வாசகர் வட்ட உறுப்பினர்கள் மற்றும்  பொதுமக்கள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு ஒவ்வொரு புத்தகங்களையும் கண்டு ரசித்துள்ளனர். மேலும் இணையவழி மூலம் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்படும் என்றும் நூலக துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *