சுதந்திரதின விழா கொண்டாட்டங்கள்… வீரர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி… விமர்சையாக நடைபெறும் ஏற்பாடுகள்…!!

75 – ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எல்லை சாலை அமைப்பின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் அம்ருத் மஹோத்சவம் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக எல்லை சாலை அமைப்பு பல்வேறு நல உதவி திட்டங்களை தொடங்கியுள்ளது. மேலும் இதன் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் 75 மருத்துவ முகாம்கள், 75 இடங்களில் மரங்கள் நடும் நிகழ்ச்சி மற்றும் 75 பள்ளிகளில் கலந்துரையாடல் நிகழ்ச்சி போன்றவற்றை நடத்த எல்லை சாலைகள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

அதோடு இந்தியாவின் 75 உயரிய கணவாய்களில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றி முக்கிய நிகழ்ச்சியும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி உத்தரகண்டின் பிபல் கோட்டி, பிதோராகர் மற்றும் சிக்கிமின் சந்த்மாரில் உள்ளிட்ட சாகச விருது வென்றவர்கள் மற்றும் போர் வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியையும் எல்லை சாலை அமைப்பு நடத்தியுள்ளது.

இதனையடுத்து பிதோராகரில் ஃபிராக் பிரிவில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சௌரிய சக்ரா விருது பெற்ற இ.இ.எம் பிரேம் சிங், நாயக் சந்திர சிங், தாமர் பகதூர்,  ஓட்டுநர் ராம்சிங் ஆகியோரது குடும்பத்தினரும் கௌரவிக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *