பல்வேறு போராட்டங்களுக்கு இடையே…. சுதந்திரம் பெற்ற வரலாறு…. தேச தலைவர்களின் தியாகம்….!!

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே சுதந்திரத்தை வாங்கி கொடுத்த தேசத் தலைவர்களை பற்றி இந்நாளில் தெரிந்து கொள்வோம்.

மகாத்மா காந்தி

இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி விடுதலைப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தியுள்ளார். உப்பு சத்யாகிரக போராட்டத்தின் மூலம் நாட்டின் விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்த காந்தியடிகள் உலக நாடுகளுக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றார். மேலும் பகவத்கீதை, லலியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் இவர் பெரிதும் கவரப்பட்டு உள்ளார். இதனையடுத்து வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம், கதர் உடை, பொய் கூறாமை, சைவ உணவு, அகிம்சை ஆகியவற்றை காந்தியடிகள் உறுதியாக பின்பற்றிய கொள்கைகள் ஆகும். இவர் குஜராத் மொழியில் எழுதிய சுயசரிதை நூல், சத்தியசோதனை உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 

சுப்பிரமணிய பாரதி

பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலை வீரர் உள்ளிட்ட பன்முகங்கள் கொண்டவராக சுப்பிரமணிய பாரதி திகழ்கின்றார். மேலும் இவர் தமிழ் கவிதையிலும், உரைநடைகளிலும் முன்னோடியாகத் திகழ்கின்றார். இதனையடுத்து தமிழ் எழுத்துக்கள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை போராட்ட உணர்வை ஊட்டியுள்ளார். அதுமட்டுமல்லாது இவரது கவித்திறனை வியந்து பாராட்டி எட்டப்ப நாயக்கர் “பாரதி” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்துள்ளார்.

 

 

சுப்பிரமணிய சிவா

சுப்பிரமணிய சிவா ஆன்மீகத்தையும், அரசியலையும் விடுதலைப் போராட்டத்தில் இணைத்து போராடியுள்ளார். மேலும் தமிழக மக்களுக்கு விடுதலை தாகத்தை ஏற்படுத்தும் சிறந்த பேச்சாளர் “ஞானபநு” என்ற இதழை நடத்தியுள்ளார். அது மட்டுமல்லாது தனது வீரமிக்க பேச்சால் “வீரமுரசு” என்றும் போற்றப்படுகிறார்.

திருப்பூர் குமரன்

ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் திருப்பூர் குமரன் பிறந்துள்ளார். 1932 – ஆம் ஆண்டு நடந்த போராட்ட அணிவகுப்பின் போது இந்திய தேசிய கொடியினை ஏந்தி ஆங்கிலேய காவலர்களால் தடியடியால் தாக்கப்பட்டும் ரத்தம் வழிய கீழே சரிந்த போதும் கூட கையில் இருந்த தேசிய கொடியை விழாமல் காத்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் அங்கே அங்கேயே உயிர் துறந்தார். எனவே இவர் “கொடிகாத்த குமரன்” என்ற சிறப்பு பெயர் வைத்து அழைக்கப்படுகின்றார்.

சுந்தரலிங்கம்

வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு அவரது தானியக் கிடங்கும் வெடிமருந்துக் கிடங்கும் சுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் இருந்தன. மேலும் கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே பிரச்சனை உருவானபோது சுந்தரலிங்கம் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக இருந்துள்ளார். 1799 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண் வடிவுடன் ஆடு மேய்ப்பவர்கள் போல வேடமணிந்து வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்கு பகுதிக்கு தீப்பந்தத்தை ஏந்தி சென்று உள்ளார். அதில் பயங்கர சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்து நாசமானது. அவர்களின் வீர மரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது.

வ. வு. சிதம்பரனார்

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்து வ.வு.சியை கடுமையாக பாதித்தது. இதனால் ஆங்கிலேயர்களின் வணிகத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். பிரிட்டிஷ் இந்திய “ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி” இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே கப்பல்களை  இயக்கிக் கொண்டிருந்தது. ஆனால் அது ஆங்கிலேயர்களின் வணிகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் வ. வு. சி இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் தொடங்கி வைக்க தீர்மானம் செய்தார். அதன் படி 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் “சுதேசி நாவாய் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். அதன்மூலம் 10 லட்சம் மூலதனம் கிடைத்தது.

புலித்தேவன்

இந்திய விடுதலை வரலாற்றில் 1751 ஆம் ஆண்டு “வெள்ளையனே வெளியேறு” என்று முதன் முதலாக புலித்தேவன் வீர முழக்கமிட்டார். மேலும் நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போரில் பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் டச்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் ஏற்க மறுத்துவிட்டார்.

சௌந்தர்ராஜன்

திருவேங்கிமலை சௌந்தரராஜன் என்பவர் ராஜாஜியுடன் ஏற்பட்ட நட்பினால் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். இவர் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு பெற்று 18 மாதங்கள் சிறை சென்றுள்ளார். இவர் காந்தியடிகள் பற்றிய நூல்களையும் “நினைவு அலைகள்” என்று சுயசரிதையும் எழுதியுள்ளார்.

கோவை சுப்பிரமணியன்

1925 ஆண்டில் அகில இந்திய நூற்போர் சங்கம் திருப்பூரில் தொடங்கப்பட்டது. இதனால் திருப்பூரில் கதர் உற்பத்தி பல கிராமங்களிலும் அதிகரித்தது. மேலும் 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தண்டி யாத்திரை செல்லும் போது அனைத்து நாட்களும் சுப்ரி கோவையில் ஊர்வலங்களை நடத்தினர். 1947ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் நினைவு தினம் அனுசரித்த காரணத்திற்காக சிறை சென்றார். மேலும் முருகப்பெருமான் மீது அதீத பற்று கொண்டதால் “முருக கானம்” என்ற பெயரில் ஆன்மிக நூலையும் எழுதியுள்ளார்.

நீலகண்ட பிரமச்சாரி 

இளம் வயதிலேயே 20 ஆயிரம் போராளிகளை ஒன்று திரட்டி இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான புரட்சி இயக்கம் ஒன்றை தோற்றுவித்து போராடினார். மேலும் பாரதியாருடன் நெருங்கிய நண்பரான இவர் இந்தியா பத்திரிக்கையை பொறுப்பேற்று நடத்தி வந்தார். மேலும் வாழ்வின் பிற்பகுதியில் துறவு மேற்கொண்டு மைசூரில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். மேலும் இவர் தனது பெயரை ஓம்காரானந்தா சுவாமி என்று மாற்றிக் கொண்டார்.

சுபாஷ் சந்திரபோஸ்

சுபாஷ் சந்திரபோஸ் இந்திய விடுதலை போராட்டத்தை தனியாக நடத்தி சென்றார். தனது 25 ஆவது வயதில் லண்டனில் படிப்பை முடித்து திரும்பிய இவரை தேசிய கல்லூரி தலைவராக சித்தரஞ்சன் தாஸ் என்பவர் நியமித்தார். மேலும் மாணவர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டும் உரைகளையும் ஆற்றினார். இதனையடுத்து இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். அப்படை மூலம் இந்தியாவை ஆக்கிரமித்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார்.

சர்தார் வல்லபாய் படேல்

வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். மேலும் இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முக்கிய அங்கம் வகித்துள்ளார். இதனையடுத்து இவர் சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர் அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். மேலும் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்து சிற்பி என்று புகழப்படுகிறார்.

கோபால கிருஷ்ண கோகலே

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது உருவான அரசியல் மற்றும் சமூக தலைவர்களில் கோபால கிருஷ்ண கோகலே முக்கிய தலைவராக இருந்தார். மேலும் இவர் ஆங்கிலேய அரசிடம் இருந்து சுதந்திரத்தை பெறுவது மட்டும் போதாது என்று கூறி சமூக மாற்றத்தையும் ஏற்படுத்த விரும்பினார்.

ஜவஹர்லால் நேரு

முதல் பிரதமரான நேரு இந்தியாவின் சிற்பி என்று போற்றப்படுகின்றார். 1920-ஆம் ஆண்டு காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு வகித்து முதன்முறையாக சிறை சென்றார். மேலும் சிறையிலேயே தன் வாழ்நாளில் 9 வருடங்கள் கழித்தார். மேலும் இவர் அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் ஆவார்.

பால கங்காதர திலகர்

பாலகங்காதர திலகர் இந்திய தேசியவாதி, சமூக சீர்திருத்தவாதி, விடுதலை போராட்ட வீரர் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவரை லோகமான்ய என்ற கௌரவ பெயர் கொண்டும் அழைக்கப்படுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *