75 உத்தரவு போட்டு இருக்கு…! அதைப்பற்றி  கவலையில்லையே…. ஹெச்.ராஜா வேதனை …!!

அறநிலைத்துறை அமைச்சர் செயல் பாபு இல்ல…. சேகர் பாபு இல்ல… ஸ்நேக் பாபு என்று சொல்கிறேன் என ஹெச்.ராஜா காட்டமாக விமர்சித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா,  தமிழகத்தில் சீனியர் அமைச்சர்கள் தங்கள் இலக்காவை பற்றி கவலைப்படாமல் என்னென்னமோ பண்ணிட்டு இருக்காங்க. ஜிஎஸ்டி மீட்டிங் போகாம ஒரு அமைச்சர் வளைகாப்புக்கும், சடங்கு சுத்தவும் போயிருக்காரு. அதே மாதிரி அறநிலையத் துறைக்கு மிகப்பெரிய அளவில் 75 கட்டளைகள் 7.6.2021-ல் உயர்நீதிமன்றம் கொடுத்துள்ளது. இதைப்பற்றி கவலைப்படாமல் உதயநிதி ஸ்டாலின் கூட்டங்களில் அவருக்கு பின்னாடி போய்கொண்டு இருக்காரு அறநிலைய துறை அமைச்சர்.

இந்த துறை இந்து மதத்தை அழிப்பதற்காக இருக்கிற துறை என்கிறதை இன்றைக்கு அமைச்சர் இங்கு வந்திருக்கும் போது இந்து சமய அறநிலைய துறையில் இந்து சமயம் என்பதை எடுத்துவிட்டு வெறும் அறநிலையத்துறை என்று போஸ்டர் அடித்து உள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அமைச்சர், நான் இந்த கூட்டத்தில் கலந்துக்க மாட்டேன் என்று கூறியிருக்க வேண்டும். ஏனென்றால், அந்த சட்டத்திற்கு பெயரே இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959. அரசாங்கம் மதசார்பற்றதா இருக்கலாம்.

ஹிந்து சமய அறநிலையத்துறை என்பதில் ஹிந்து சமயம் என்கிறதை எடுத்து வெறும் அறநிலையத்துறை என்று போட்ட அதிகாரிகள் மீது, அலுவலர்கள் மீது மாண்புமிகு அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால்  ஆண்டவன் கூலி கொடுக்கிறான். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக இருக்கும் போதே வம்பு பண்றதுக்காக ஒரு அறிவிப்பை அறிவித்தார்.

ஆண்டவன் என்னமோ பண்ணியிருக்கிறார்கள் என சொல்லுறாங்க..  இந்த அமைச்சரை செயல் பாபு என்று சொல்கிறார் நம்ம முதலமைச்சர்….  இன்றைக்கு நடந்தது உண்மை என்று சொன்னால் அவர் செயல் பாபு இல்ல…. சேகர் பாபு இல்ல… ஸ்நேக் பாபு என்று சொல்கிறேன். அது எப்படி ஹிந்து சமய அறநிலைத்துறையில்  இந்து சமயத்தை எடுப்பீர்கள் என ஹெச்.ராஜா காட்டமாக விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *