அஜித் , ரஜினி உட்பட 75 படங்களுக்கு சிக்கல்…. பெப்சி திடீர் முடிவு …!!

பெப்சி எடுத்துள்ள திடீர் முடிவால் அஜித்தின் வலிமை , ரஜினியின் அண்ணாத்த ஆகிய படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, கர்நாடகா கேரளா எல்லை ஓரத்தில் உள்ள திரையரங்குக்கு , வணிக வளாகம் மூட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் , அமைப்புகள் அனைத்தும் நல்ல ஒத்துழைப்பை கொடுத்து வருகின்றனர். சென்னையில் நடந்த தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்க கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மார்ச் 31 வரை  தமிழ் திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. இதனால் ரஜினியின் அண்ணாத்த ,  அஜித் நாடைத்த வலிமை உள்பட சுமார் 75 படப்பிடிப்புகள் நிறுத்தப்பட வாய்ப்பு இருக்கின்றது.