74 – வது குடியரசு தினம்… ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை…!!!!!

நாடு முழுவதும் இன்று 74-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை  முன்னிட்டு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம், ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதில் காரைக்காலில் இருந்து திருச்சி சென்ற ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன் தலைமையில் தலைமை காவலர்கள் மதியழகன், சங்கீதா, இருப்பு பாதை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் போன்றோர் பயணிகள் உடமைகளை சோதனை செய்துள்ளனர். அப்போது பாதுகாப்பான பயணத்திற்கு ரயில்வே துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்கு பயணிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போலீசார் பயணிகளிடம் கேட்டுக் கொண்டனர்.