புதிதாக 7,00,00,000….. மொத்தமாக 18,00,00,000…. ஜே பி நட்டா பெருமிதம்…!!

பாஜகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 கோடியாக அதிகரித்துள்ளது என்று பாஜகவின் செயல் தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க_வின் செயல் தலைவர் ஜே பி நட்டா கூறும் போது , கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி முதல் நாடு முழுவதும் பாஜகவின் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் நடைபெற்றது.இதுவரை நடைபெற்ற உறுப்பினர் பதிவில் புதிதாக 7 கோடி பேர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.

மேலும்  அவர் பேசுகையில் , இதனால் பா.ஜ.க கட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 கோடியாக அதிகரித்துள்ளது.மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கட்சியின்  உறுப்பினர் சேர்க்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருவதால் இன்னும் அதிகமானோர் பாஜகவில் இணைய உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.