“சூறைக் காற்றில் சாய்ந்த 70,000 வாழைகள் “விவசாயிகள் வேதனை ..!!

சூறாவளிக்காற்றில் 70,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்  .

திருவண்ணாமலையை அடுத்த சந்தவாசல், சின்ன புஷ்பகிரி, இரட்டை கார் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று அடித்த சூறாவளி காரணமாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து வீணாகி உள்ளன.

இவை அனைத்தும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைகள் என்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.சூறாவளிக்காற்றில் சாய்ந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களுக்கு  தகுந்த இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.