மோடியின் புதிய அமைச்சரவையில் 70 அமைச்சர்கள்…..!!

பிரதமர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் 65 முதல் 70 பேர் வரை மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க இருக்கின்றனர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350_க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உரிமை பெற்று இருக்கிறது. இன்று மாலை 7 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். அதே போல பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்களும் பதவி ஏற்க இருக்கின்றார்கள்.

பிரதமர் பதவி ஏற்பு க்கான பட முடிவு

இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் எத்தனை அமைச்சர் குறிப்பாக யார் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி போன்ற விவாதங்கள் வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்ட நாள்முதல் எழுந்து வருகின்றது. இன்றைய மத்திய அமைச்சரவையில் பியூஸ் கோயல், ராம்நாத் பஸ்வான் ,  ஸ்மிதிராணி , நிர்மலா சீதாராமன்,  நிதின்கட்காரி, பிரகாஷ் ஜவடேகர் , ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட 65 லிருந்து 70 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர்.