70 வருடங்களுக்குப் பின்…..”கத்தரிமலை கிராமத்திற்கு 1 1/2 கோடியில் சாலை”…. மிகுந்த மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!!!!!

கத்திரிமலை கிராமத்திற்கு 1 1/2 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கத்திரிமலை என்ற  கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் பர்கூரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணி கத்திரிமலை கிராமத்திற்கு சாலை வசதி அமைக்க உத்தரவிட்டார். இதற்காக  1 கோடியை 48 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணியை கடந்த  ஜனவரி மாதம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .தற்போது கத்தரிமலைக்கு 8.1 கிலோமீட்டர் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் மழை பகுதி  மட்டும் 6.3 கிலோமீட்டர் ஆகும்.

இந்த மலை பாதையில்  45 கொண்டை  ஊசி வளைவுகள் உள்ளது. இதனால்  8.1 கிலோ மீட்டருக்கு  மண் ரோடு தயாராகியுள்ளது. இதன் மூலம்  கிராம மக்கள் வாகனங்களில் பயணம் செய்யலாம். இந்த பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி  அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி உதவி பொறியாளர் சிவப்பிரசாத் நேற்று கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்கள் திரும்ப இடவசதி உள்ளதா? சாலைக்கான அகலம்  சரியாக உள்ளதா என்பது குறித்து சோதனை செய்துள்ளார். இதுகுறித்து கத்திரிமலை கிராம மக்கள்   கூறியதாவது. நாங்கள் பல தலைமுறைகளாக இங்கு தான் வசித்து வருகிறோம். எங்களுக்கு ரோடு வசதி இல்லாததால் யாருக்காவது மருத்துவ சேவை தேவைப்பட்டால் தொட்டில் கட்டி அவர்களை சுமந்து சென்று மருத்துவம் பார்த்து வந்தோம். ஆனால் சுமார்8  கிலோமீட்டர் வரை செங்குத்தான மலையில் நடந்து செல்ல  வேண்டும்.

மேலும் ரேஷன் வாங்கவோ, வெளியூர் செல்லவோ வேண்டுமென்றால் மழையில் ஏறி இறங்க  வேண்டும். இதனால் நாங்கள் சுமார் 70 ஆண்டுகளாக எங்களுக்கு சாலை வசதி வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் இப்போதுதான் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. இந்த சாலையால் எங்கள் கிராமத்திற்கு டிராக்டர்,  சரக்கு வேன்  போன்ற வாகனங்கள் வருகிறது என கூறியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை மலைகளில் உள்ள சாலைகள் அனைத்தும் ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்டது.  ஆனால் முதல் முறையாக நமது தமிழக அரசால்  இந்த கிராமத்தில் மலை பாதை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *