7 ஆண்டுகளாக குழந்தையில்லை… “தொடர்ந்து அடித்து உதைத்த கணவன்”… மனமுடைந்து மனைவி எடுத்த சோக முடிவு..!!

மயிலாடுதுறை அருகே குழந்தை இல்லாததை சுட்டிக் காட்டியும், வரதட்சணை கொடுமை செய்ததால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அனந்தநல்லூரைச் சேர்ந்த 32 வயதான புதுமலர் செல்விக்கும், திருவாரூர் மாவட்டம் குடவாசல், அந்நியூரை சேர்ந்த 40 வயதான கூலித் தொழிலாளி குருமூர்த்திக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி 7 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் குருமூர்த்தி தினமும் குடித்துவிட்டு புதுமலர் செல்வியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று புதுமலர் செல்வி அந்நியூரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பாலையூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புது மலர் செல்வியின் சகோதரன் பூபாலன் பாலையூர் காவல் துறையினரிடம் குருமூர்த்தியின் மீது, தங்கையை குழந்தை இல்லாத காரணத்தினால் அடித்து துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார்.

புகாரின் பெயரில் காவல்துறையினர் குருமூர்த்தியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் நிறைவடையாதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே குருமூர்த்தி மீதும், அவரது தாயார் மீதும் புதுமலர் செல்வியின் உறவினர்கள் வரதட்சணை கேட்டும், குழந்தை இல்லாத காரணத்தை கூறியும் கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *