“இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை “மகளிர் நீதிமன்றம் அதிரடி !!..

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பெண்ணை பாலியல்பலாத்காரம் செய்த விவசாயிக்கு மகளிர் விரைவு நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த புதுக்காடு பகுதியை சேர்ந்த வாத்தியார் என்னும் விவசாயி அதே பகுதியில் ஆடு மாடுகளை மேய்த்து வந்த 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஊத்தங்கரை பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .

 

அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வாத்தியாரை கைது செய்து விசாரித்து வந்தனர் இந்நிலையில் கைது செய்யப்பட்ட வாத்தியார் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார் அதன்பின் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு  7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு உடனடியாக நிறைவேற்றும் வகையில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்