” 7 கட்டமாக மக்களவை தேர்தல் ” தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் ஆணையம்…!!

வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

17_ஆவது மக்களவை தேர்தல் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுமென ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று மாலை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இந்த சந்திப்பு நடைபெற்ற பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மக்களவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டார்.

Image result for Sunil Arora, CEC: Commission has also directed political parties/candidates to desist from using environmentally hazardous publicity material&promote usage of eco friendly substances for preparation of election campaign material, this is a kind of appeal to everybody.

அப்போது அவர் பேசுகையில் , நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வருகின்றது. இனிமேல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கி வைக்கக்கூடாது. அனைத்து வாக்குசவட்டி மையங்களிலும் VVPAT கருவி பொருத்தப்படும் .தேர்தலை அமைதியாக நடத்த மத்திய ரிசர்வ் படையினர் குவிக்கப்பட்ட இருக்கின்றார்கள் . அனைத்து கட்டத்தில் தேர்தல் நடவடிக்கை பார்வையாளர்கள் இருப்பார்கள் என்று கூறினார்.

புதிய வாக்க்களர்கள் : 

இந்திய நாட்டில் 90 கோடி வாக்காளர்கள் உள்ளார் . புதிய வாக்காளர்கள் 1.5 கோடி பேர் இணைக்கப்பட்டுள்ளனர் . வாக்கு சீட்டை ஆதாரமாக கொண்டு வாக்களிக்க முடியாது என்று ஏற்கனவே அறிவித்திருகின்றோம். நாடாளுமன்ற தேர்தலில்  17.4 இலட்சம் ஒப்புகை சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும் . 10 லட்சம் வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

17_ஆவது மக்களவை :

வருகின்ற 17_ஆவது மக்களவை தேர்தல் 11.04 முதல் 7 கட்டங்களாக நடக்கின்றது .

முதல் கட்டம் : 11.04.19   91

இரண்டாம் கட்டம் : 18 .04.19

மூன்றாம் கட்டம் : 23.04.19

நான்காம் கட்டம் : 29.04.19

ஐந்தாம் கட்டம் : 06.05.19

ஆறாம் கட்டம் : 12.05.19

ஏழாம் கட்டம் : 19.05.19

வேட்புமனுதாக்கல் : 18.03 .19

வேட்புமனு இறுதிநாள் : 25.03.19

வாக்கு எண்ணிக்கை : மே 23_ஆம் தேதி .

மேலும் தமிழகத்தில் மக்களவை தேர்தல் 2_ஆவது கட்டமாக 18.04.19_ஆம் தேதி நடைபெறும் . அதே போல தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தேர்தலுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.