ஆந்திராவில் விஷவாயுத்தாக்கி  7 பேர் உயிரிழப்பு!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பெத்தபுரம் மண்டலத்தில் உள்ள ஜி ராகம்பேட்டையில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் டேங்கை  சுத்தம் செய்து கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். அம்பட்டி சுப்பண்ணா என்ற தனியார் எண்ணெய் தொழிற்சாலை வளாகத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.

இறந்தவர்கள் வெச்சாங்கி கிருஷ்ணா, வெச்சாங்கி நரசிம்மம், வெச்சாங்கி சாகர், கொரத்தாடு பாஞ்சி பாபு, கர்ரி ராமராவ், கட்டமுரி ஜெகதீஷ் மற்றும் பிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இறந்தவர்களில் ஐந்து பேர் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள படேருவைச் சேர்ந்தவர்கள், மேலும் இருவர் புலிமேரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளனர்.