தனியார் பேருந்து கோர விபத்து…. 7 பேர் பலி, 34 பேர் படுகாயம்…!!

உத்திரப் பிரதேசம் அருகே தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில்  7 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். 

டெல்லியிலிருந்து தனியார் பேருந்து ஓன்று  பனாரஸ் நோக்கி ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ்வே    சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது  உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரி என்ற இடத்தில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த டிரக்கின்  மீது பயங்கர சத்தத்துடன் வேகமாக மோதியது.

Image result for 7 Killed, 34 Injured in Bus Accident on Agra-Lucknow Expressway Near Mainpuri

இதில் பேருந்தின் முன் பகுதி சின்னா பின்னமாக நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 34 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்ட போலீசார், உத்தரப்பிரதேசம்  இட்டாவாவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில் உருக்குலைந்த பேருந்து  கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டது.