அமேசானுக்காக கைகோர்த்த 7 நாடுகள் …!!

அமேசான் மழை காட்டு தீயை அணைக்க 7 நாடுகள் முன்வந்து ஒப்பந்தம் செய்துள்ளது.

உலகத்தின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் மழை காட்டு தீ சமூக ஆர்வலர்களை வேதனை கொள்ள வைத்துள்ளது. கடந்த சில மாதங்களாக பற்றி எரிந்து வரும் காட்டு தீயால்  அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிர்கள் மரணித்துள்ளது. பல்வேறு உலக நாடுகள் அமேசானை பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் உலகம் முழுவதும் எழுந்து வருகின்றது.

இந்நிலையில் தென்னமெரிக்காவில் அமேசான் காடுகளில் பரவியுள்ள  பிரேசில் , கொலம்பியா , பெரு உள்ளிட்ட ஏழு நாடுகள் ஒன்றாக இணைந்து அந்த காடுகளைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.இதன்மூலம் 7 நாடுகளின் பேரிடர் மீட்புக் குழுக்களை இணைத்து உருவாக்கக்கூடிய கூட்டமைப்பு அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை முனைப்புடன் அணைக்கும் பணியை மேற்கொள்ளும் என்று சொல்லப்பட்டது.