தபால் அலுவலகம் மூலம் வழங்கப்படும் கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு ஆண்டுக்கு 7.5 % வட்டி வழங்கப்படுகிறது. இது தபால் நிலையத்தில் வழங்கப்படும் 5 ஆண்டுகால டெபாசிட் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவரின் பணம், 10 வருடங்களில் இரட்டிப்பாகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
உங்களுக்கு ஒருவேளை பணத்தேவை ஏற்பட்டால் இந்த சான்றிதழ்களை அடமானமும் வைக்கலாம். கிசான் விகாஸ் பத்ரா மீதான வட்டி விகிதம் ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை மாறும். ஆனால் முதலீட்டாளர் அவற்றை வாங்கும்போது முதிர்வு வரை என்ன வட்டி இருக்கிறதோ அதன் அடிப்படையில் வட்டி லாபம் கிடைக்கும்.