கொல்கத்தாவில் 7 மாத குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் கொடூரத்தின் உச்சமான இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது தெருவோரத்தில் வீடற்ற ஒரு தம்பதி வசிக்கிறார்கள். கடந்த 30ஆம் தேதி இரவு 1:45 மணிக்கு அந்த 7 மாத குழந்தை கதறி அழுது கொண்டிருந்தது. அதாவது தெருவோரத்தில் அடையாளம் தெரியாத 7 மாத பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.
அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் குழந்தையின் அந்தரங்க உறுப்பில் காயங்கள் இருப்பது தெரியவந்த நிலையில் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குழந்தையின் அந்தரங்க உறுப்பில் இருந்த காயத்தை பார்த்து மருத்துவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பெற்றோரிடம் கூறிய நிலையில் அதைக் கேட்ட அவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.