இருக்குற ஸ்பீடு பத்தல…. வரப்போகுது அற்புத டெக்னலாஜி…. ஆப்பிளுடன் கைகோர்த்த பிரபல 10 நிறுவனங்கள்…. !!

இன்றைய உலகில் இன்டர்நெட்டின் தேவை பொதுமக்களுக்கு அன்றாடத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இன்டர்நெட் இல்லாவிட்டால் எதுவும் இல்லை என்ற அளவிற்கு உலகம் டிஜிட்டல் ஆக மாறிக்கொண்டிருக்கிறது. இன்டர்நெட்டில் 2ஜி, 3ஜி, 4ஜி தற்போது 5ஜி என அதிவேகமாக இன்டர்நெட்டை  பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே வருகின்றன.

இந்நிலையில், ஆப்பிள்  நிறுவனம் Alience for telecommunication industry solution (AITS) என்ற நிறுவனத்துடன் இணைந்து 6 ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி  Charter, cisco, google, hewlett-packard, intel,keysight,technologies,lg,mavenir,MITRE,VMware ஆகிய மேலும் 10 நிறுவனங்களும் இதில் இணைந்துள்ளன. ஒரு சில நாடுகளில் 5ஜி தொழில்நுட்பம் கடந்த ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *