65 வயது…. 19 வருடம் ….. ரூ 70 சம்பளம்….. கழிப்பறை வாழ்க்கை…!!

19 ஆண்டுகளாக பொதுக் கழிப்பறையை சுத்தம் செய்து ரூ.70 சம்பாதித்து அங்கேயே மூதாட்டி தங்கி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மதுரை மாவட்டம் ராம்நாடு பகுதியில் உள்ள ஒரு பொதுக் கழிப்பறையில் 19 ஆண்டுகளாக கருப்பாயி என்ற மூதாட்டி வசித்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கும் இருந்த மகள் கைவிட்டதால் எந்த உதவியும் இல்லாமல் இந்த பொதுக் கழிப்பறையை தினமும் சுத்தம் செய்வது வாழ்ந்து வருகின்றார். இதற்க்கு தினமும் ரூ.70 முதல் 80 வரை ஊதியமாக கிடைப்பதாகவும் அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மூதாட்டி கருப்பாயி கூறும் போது, அரசு கொடுக்கும் முதியோர் உதவித் தொகைக்காக பதிவு செய்துள்ளேன். ஆனால் எனக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை முறையிட்டும் எந்த பயனுமில்லை என்று வேதனையாக தெரிவித்தார்.   மூதாட்டிக்கு ஆதரவாக இருக்க வேண்டிய மகளும் கைவிட்டதால் இப்படி ஒரு வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளார்.