திக் திக்…. இன்னும் 37,195 மட்டுமே …. வித்தியாசம் வெறும் 11,644….. யாருக்கு வேலூர் ..?

இன்னும் 37,195 வாக்குகள் மட்டுமே எண்ணப்படாமல் இருக்கும் சூழலில் வேலூர் தேர்தலில் யார் வெற்றிபெறுவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வேலூரில் ஆகஸ்ட் 5_ஆம் தேதி  நடைபெற்ற வாக்குபதிவில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர். 71.51 சதவீதம் பதிவாகிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 7 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது. காலை தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் முன்னிலை வகித்து வந்தார். 15,000 வாக்குகள் வரை முன்னிலை பெற்ற நிலையில் தீடிர் திருப்பமாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார்.

இருவருக்கும் இடையே 17,000 வாக்குகள் வரை வித்தியாசம் இருந்தாலும் நிமிடத்துக்கு நிமிடம் வாக்கு வித்தியாசம் மாறிக்கொண்டே வந்தது. யார் வெற்றி பெற போவார்கள் என்ற பரபரப்பு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டு இருக்கும் நிலையில் தற்போது 16 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.

22 சுற்றுகள் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை பதிவாகிய வாக்குகளில் இன்னும் 37,195 வாக்குகள் மட்டுமே எண்ணப்படாமல் இருக்கின்றது . தற்போது வரை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,68,870 வாக்குகளும் , அதிமுகவின் AC சண்முகம் 4,57,226 வாக்குகளும்  எடுத்துள்ளனர். இருவருக்குமிடையே வித்தியாசம் 11,644 வாக்குகள் மட்டுமே யாரு வெற்றிபெறுவர்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.