இன்ஸ்டாகிராமில் ஒரு இளம் பெண் தன் வயதைவிட இளமையாக தெரியும் தந்தையின் ரகசியத்தை பகிர்ந்துள்ளர். அதாவது கொரிய இன்ஸ்டாகிராம் பயனர் ஹன்னா, மே 5 அன்று வெளியிட்ட வீடியோவில், தனது தந்தை 62 வயதானவர் என்று நம்ப முடியவில்லை என்று பலரும் கூறியதை எடுத்துக் கூறி, “இன்று என் அப்பா ஒரு நாளில் என்னென்ன சாப்பிடுகிறார் என்பதை பகிரப்போகிறேன்” என பதிவிட்டுள்ளார். வீடியோவில் அவர், “எப்போதும் ஒரு சூடான பிளாக் காபியுடன் தான் நாளை தொடங்குவார். காலையிலே சாலட்தான் சாப்பிடுவார், அதில் வேறொருவர் நினைக்க கூட முடியாத பொருட்கள் போடுவார். அதாவது அதில் மாதுளம்பழம் அல்லது வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒரு பழ வகையை சேர்த்துக் கொள்வாராம்.

அவரது தந்தை பால், சர்க்கரை போன்றவற்றை தவிர்த்து வாழ்வதுடன், பச்சை தேயிலை லாட்டே-வில் கூட சாய்மில்க் மட்டும் கோரி, சிரப்பும் வேண்டாம் எனத் தெரிவிப்பாராம். மேலும், வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி பயன்படுத்துவார், மாட்டிறைச்சியை தவிர்த்து, கோழி மற்றும் கடல்சார் உணவுகளையே விரும்புவார். முக்கியமாக, மது முழுமையாக தவிர்க்கப்படுவதாகவும் ஹன்னா கூறுகிறார். இவர் சுகாதார உணவுகளை கடுமையாக பின்பற்றும் போதிலும்,  ஒரு உணவை மட்டும் அவரால் தவிர்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார் – அது தான் நூடுல்ஸ் என்றார் ஹன்னா.

“அவரது பிடித்த சிற்றுண்டி வறுத்த கருப்பு பயறு தான்,” எனவும், “இது தான் அவருக்கு இன்னும் முழுமையான கருப்பு தலைமுடி இருக்கிறதற்கான ரகசியமாக இருக்கலாம்” எனவும் ஹன்னா புகழ்ந்துள்ளார். அவர் மேலும், “இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டபின் தான், உணவுப் பழக்கத்தில் கடுமையான கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டதாக” தெரிவித்தார். இந்நிலையில், அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி, “அவரது தோல் அற்புதமாக உள்ளது!”, “அவர் 32 வயதுடன் கூட ஒப்பிடலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Hannah 🙂 (@hanabananakor)

மேலும் இந்த வீடியோ கொரிய உணவுப் பழக்க வழக்கங்களில் இருக்கும் இயற்கை அழகு ரகசியங்களை உலகத்துடன் பகிரும் வகையில் அமைந்துள்ளது.