ரூ 600 தருகின்றோம் ”நீரை சிக்கனமாக பயன்படுத்துங்க” முதல்வர் அறிவிப்பு…!!

நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி விதைப்பு முறையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 600 ரூபாய் மானியம் வழங்கப்படுமென்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

டெல்டா விவசாயிகள் காவிரி நீரை ஆதாரமாக கொண்டு ஆண்டுதோறும் 13 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் 13-ம் தேதி நீர் திறக்கப்பட்ட நிலையில்அந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்கு தனது வேண்டுகோளை விடுத்துள்ளார்.அதில்  நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி விதைப்பு முறையில் விவசாயிகள் ஈடுபட வேண்டும்.

Image result for நேரடி விதைப்பு முறை

நேரடி நெல் விதைப்பு முறை மூலமாக சாகுபடி மேற்கொள்ளும் போது சுமார் 40 முதல் 45 டிஎம்சி தண்ணீர் சேமிக்க படுவதோடு நெல் பயிர் 10 முதல் 15 நாட்களுக்கு முன்னதாகவே அறுவடைக்கு தயாராகி விடும் என்ற அடிப்படையில் இந்த நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும்  நேரடி நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக ஏக்கர் ஒன்றுக்கு 600 ரூபாய் ரூபாய் வீதம்  மானியம் வழங்கப்படும் என்றும் இதற்காக 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.