தமிழகத்தில் கொரோனோவால் இன்று 60 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 1,021ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 1,021 ஆக உயர்ந்துள்ளது. இன்று 2,325 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 50,074 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 56.35% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 90,167ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,856 பேரும், பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 87 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 43 தனியார் மையங்கள் என மொத்தம் 90 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 38,889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 30,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதித்தவர்களில் 2,378 பேர் ஆண்கள், 1,565 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 12 வயதுக்குட்பட்ட 4,437 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 74,967 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 10,763 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *