இருளில் மூழ்கிய உக்ரைன்…. 60 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு…. அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு இருப்பதால் மக்கள் அவதிப்படுவதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் மின் நிலையங்களை நோக்கி தாக்குதல் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. சமீப நாட்களாக ரஷ்ய நாட்டின் ஆளில்லா விமானம், ஏவுகணைகள், உக்ரைன் நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளை தாக்கி வருகிறது. உக்ரைன்  நாட்டின் மின் நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யாவால் அழிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது வரை மின்வெட்டால் அவதிப்பட்டு வருவதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருக்கிறார். நாட்டில் அதிகமான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.