மொத்தம் 60 கிலோ கெட்டுப்போன இறைச்சி…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் மற்றும் ஊழியர்கள் சாந்தி நகரில் இருக்கும் பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு கடையில் பழைய கெட்டுப்போன கோழி இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சுமார் 60 கிலோ எடையுள்ள இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து கிருமி நாசினி தெளித்து அழித்தனர். பின்னர் கடை உரிமையாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதேபோல் மற்றொரு கடையில் கெட்டுப் போன பழ ஜூஸ் 15 லிட்டர், ரோஸ்மில்க் 10 லிட்டர், பாதாம் பால் 5 லிட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளரான முருகேசனுக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.