ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பத் மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் பேனா தினம் கொண்டாடுவதற்காக தங்களுடைய சட்டையில் எழுதி வைத்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் 60க்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையை கழட்டியதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி முடிந்து சட்டை இல்லாமல் மாணவிகள் வீட்டிற்கு திரும்பியதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அதாவது சட்டையை கழட்டிய ஆசிரியர் அதற்கு மேல் அணிந்திருக்கும் பிளேசர்களை மட்டும் அணியுமாறு கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் துணை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.