6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை……!!

கோவை துடியலூரில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்த 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக உறவினர்கள் புகார் அளித்தனர்.

கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிகளின் 6 வயது பெண் குழந்தை அங்கேயுள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் 1_ஆம் வகுப்பு படித்து வந்தது . இந்நிலையில் நேற்று மாலை பள்ளி சென்று மாலை வீடு திரும்பிய சிறுமி அருகில் விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் நீண்ட நேரமாகியும்  சிறுமி வீடு திருபாததால்  பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் . இதுகுறித்து தடாகம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , போலீசாரும் விடிய விடிய குழந்தையை தேடி வந்தனர்.

கோவையில் காணாமல் போன சிறுமி ரத்தக்காயங்களுடன் பிணமாக மீட்பு

இந்நிலையில் இன்று காலை பன்னிமடை பகுதின் மற்றொரு வீட்டின் முட்டுச்சந்தில், முகத்தில் டி சர்ட் சுற்றப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுமியை  பாலியல் வன்புணர்வு செய்து கொன்றிருக்கலாம் என்று பெற்றோர்  சந்தேகிக்கின்றனர். காணாமல் போன சிறுமி காயங்களுடன் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.