“பெற்றோர் அலட்சியம்” 6 வயது குழந்தை பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சென்னை தாம்பரம் அருகே வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயது பெண் குழந்தை இரண்டாவது மாடியிலிருந்து கீழேவிழுந்து உயிரிழந்துள்ளது.

சென்னை தாம்பரம்  பகுதியை அடுத்த திருமலை நகர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பார்த்திபன் சூரியகல என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராகவி என்ற பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ராகவி வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

Image result for குழந்தை பலி

இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ராகவி எதிர்பாராத விதமாக அவர்கள்  வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேலையூர் காவல்நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *