6 வயது சிறுவனின் பழமையான கண்டெடுப்பு.!!!.. மில்லியன் கணக்கான விலங்கு கொம்பா…?

இங்கிலாந்தை சேர்ந்த 6 வயது சிறுவன் புழுக்களை தேடி மண்ணில் தோண்டிய போது கிடைத்த மிக பழமையான புதை படிமம்.

தனது ஆறு வயதிலேயே பழம்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டு திகழும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்தைச் சேர்ந்த சித்தார் சிங் ஜமாத்  என்ற சிறுவன் ஒருவன் புழுக்களைத் தேடி ஈர மண்ணில் குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது வால்செல் பகுதியில் மில்லியன் கணக்கிற்கு மேலான ஆண்டுகளுக்கு பழமையான விலங்கின் கொம்பு போன்ற புதை படிமத்தை கண்டெடுத்ததாக தன் தந்தையிடம் காண்பித்துள்ளார்.

இந்த சிறுவனின் தந்தை விஷ் சிங் என்பவர் பழம்பொருள் தொல்லியல் ஆராய்ச்சி நிபுணர் ஆவார்.  இவர் தன் மகன் கண்டெடுத்த விலங்கு கொம்பின் புதைபடிவம் 251 முதல் 458 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உயிர் வாழ்ந்த விலங்குகளின் கொம்பு என தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் அவர் தன் மகனின் கண்டுபிடிப்பை பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆராய்ச்சி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளார்.