வயசு 6…ஆனா பன்ணுன வேலை! பலரின் பாராட்டை பெற்ற சிறுவன்

அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட விலை மதிப்புமிக்க பொருள் மீண்டும் கிடைத்தது…!

தெற்கு கரோலினா ஏரி பகுதியில் நீருக்கடியில் ஏதேனும் உலோக பொருட்கள் தென்படுகிறதா என விளையாட்டாக  காந்தத்தை வைத்து ஒரு சிறுவன் தேடிக்கொண்டிருந்தான். திடீரென காந்த தூண்டிலில் கடினமான பொருள் சிக்கியது. அதை இழுக்கமுடியாமல் போராடிக்கொண்டிருந்தான், உடனே சிறுவனின் பெற்றோர் உதவினர். பின்னர் நீரிலிருந்து மேலே எடுத்தபோது ஆச்சர்யம் காத்திருந்தது. அது ஒரு  பூட்டப்பட்டு இரும்பு பெட்டி..உடனே அச்சிறுவனின் குடும்பத்தினர்  காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பெட்டியை சோதனை செய்ததில் அதில் விலையுயர்ந்த தங்க நகைகள் இருந்தது, இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் வீட்டில் 10 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட நகைகள் எனவும் கண்டறிந்தனர்.

பின்னர் அந்த நகைகளை அப்பெண்ணிடம் போலீசார் ஒப்படைத்தனர். 10 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன விலைமதிப்பு மிக்க பொருட்கள் மீண்டும் கிடைத்ததால் அச்சிறுவனை அந்த பெண் குடும்பத்தினர் அரவணைத்து கண்ணீருடன் தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *