விமானம் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பரிதாப பலி!!

அமெரிக்காவில் நோயாளிகளை ஏற்றி சென்ற இரட்டை என்ஜின் கொண்ட விமானம், விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவின்  டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மேற்கு ஹவுஸ்டன் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம்  5 நோயாளிகளை ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக Beechcraft BE58 ரக விமானம் கெர்வில்லி முனிசிபல் (Kerrville) விமான நிலையம் நோக்கி சென்றது.

Image result for Authorities investigate at the crash scene of a twin-engine Beechcraft BE58, Monday,இந்த விமானம் கெர்வில்லி விமான நிலையத்தை அடைய சில நிமிடங்கள் மட்டுமே  இருந்த நிலையில், டெக்சாஸ் அருகே உள்ள  மலைப்பகுதியில் திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தை இயக்கி வந்த உரிமையாளர் மற்றும் 5 நோயாளிகள் உயிரிழந்தனர். விமானத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதா என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.