6 பேர்…. 1 பெண்… கள்ள காதலனை துரத்தி…. கட்டுக்குள் தூக்கி சென்று பலாத்காரம்…!!

சேலத்தில் கள்ள  காதலனை விரட்டி விட்டு 6 பேர் கொண்ட கும்பல் பெண்ணை காட்டுக்குள் தூக்கி சென்று  வன்புணர்வு செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்  மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த 32 வயதான திருமணமான பெண்ணுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திங்கட்கிழமை காலையில் அந்த பெண்ணை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நெய்யமலை அடிவாரத்திலுள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.

Related image

வனப்பகுதியை ஒட்டி வாகனம் நிற்பதை கண்ட ஆறு பேர் கொண்ட கும்பல் நிச்சயம் பெண்ணை அழைத்துக் கொண்டு தான் வந்திருக்க வேண்டும் என எண்ணி காத்துக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பெண்ணுடன் வெளியே வந்த தினேஷை அந்த கும்பல் சரமாரியாக தாக்க தொடங்கியது. ஆள் அரவமற்ற அந்த காட்டில் ஆறு பேரிடம் சிக்கிக்கொண்ட தினேஷ் காதலியை விட்டு விடுமாறு கெஞ்சினார். ஆனால் தினேஷை அடித்து விரட்டிய 6 பேர் கொண்ட கும்பல் பெண்ணை வனப்பகுதிக்குள் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.

Related image

கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவோர் வரும் சத்தம் கேட்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதையடுத்து குற்றுயிரும் குலை உயிருமாக அங்கிருந்து தப்பிய இளம்பெண் தனக்கு நேர்ந்த துயரம் குறித்து ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இடையப்பட்டி அழகேசன் சேதுபதி மணிகண்டன் கோகுல் வெங்கடேசன் கலையரசன் ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற வேறு ஏதேனும் சம்பவங்களுக்கும் அந்த கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.