6 புதிய MPக்கள் போட்டியின்றி தேர்வு….பேரவை செயலாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு மனு தாக்கல் செய்த 6 பெரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 18ஆம் தேதி  மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் மனு தாக்கல் செய்த   11 பேரில் வைகோவிற்கு மாற்றாக திமுக சார்பில் போட்டியிட இருந்த சம்பத் மற்றும்  சுயேச்சை வேட்ப்பாளர்கள்  உட்பட   5 பேர் தங்களது மனுக்களைத்  திரும்பப் பெற்றுக்கொள்ள 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Image result for மாநிலங்களவை தேர்வு

இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது ஜான்,சந்திரசேகர்,பாமக அன்புமணி ராமதாஸ் ஆகிய 3 பேர் மற்றும் திமுக சார்பில் போட்டியிட்ட சண்முகம்,வில்சன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகிய 3 பேர் என மொத்தம் 6 பேர் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை சட்ட பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகார பூர்வமாக அறிவித்தார்.