கோவையில் 6 லஷ்கர் இ தொய்பா…. 1 பாகிஸ்தான்….5 இலங்கை… நுழைந்தது எப்படி..?

கோவையில் பதுங்கி இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவ கேரளாவை சார்ந்தவர் உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கையில் 6 பேரில் 5  இலங்கையை சேர்ந்தவர் என்றும் , ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டு இருந்தது.மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து தமிழகம் முழுவதும் போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

Image result for லஷ்கர் இ தொய்பா

 

கோவையில் மட்டும் 200 போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பேருந்து நிலையில் , இரயில் நிலையம் என பயணிகளை முழு பரிசோதனை செய்தனர். நகரில் உள்ள CCTV கேமராக்களையும் ஆய்வு செய்து வந்தனர். இதையடுத்து கோவை போலீஸார் பயங்கரவாதிகள் என சந்தேகித்து 3 பேரின் புகைப்படத்தையும் , வாகனங்களின் என்னையும் வெளியிட்டனர். தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்ததில் கேரளாவைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன் இந்த ஊடுருவல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.