முதல் முறையாக சாம்பியன்… வெற்றி மகிழ்ச்சியில் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட உனத்கட்!

ரஞ்சி கோப்பையை முதல்முறையாக வென்ற சந்தோஷத்தில் உனத்கட் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.  

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா மற்றும் பெங்கால் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சவுராஷ்டிரா அணி வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இதற்கு முன் 3 முறை சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட சவுராஷ்டிரா அணி முதன்முறையாக உனத்கட் தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

Image

இதையடுத்து சாம்பியன் பட்டம் வென்ற கையோடு மகிழ்ச்சியுடன் உனத்கட் நிச்சயதார்த்தம் செய்துள்ளார். அவருக்கு செதேஷ்வர் புஜாரா வாழ்த்து தெரிவித்தது, தனது மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.