“புஸ் புஸ் என்று வந்த சத்தம்” அதிர்ச்சியில் அக்கம்பக்கத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி….!!!

6 அடி நீளமுள்ள நாகப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் பகுதியில் திருமணமண்டபம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மண்டபத்தின் பின்புறம் அமைந்துள்ள வீட்டின் அருகே புஸ் புஸ் என்று சத்தம் கேட்டுள்ளது. எனவே அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அதில் சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 6 அடி நீளமுள்ள நாகப் பாம்பை பிடித்து குடியாத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *