#MIvsGT:6, 6, 1, 6, 1, 6, 2, 4, 6… 9 பந்தில் 5 சிக்ஸர்…. மரண பயம் காட்டும் சுப்மன் கில்….!!

ஐபிஎல் ஆட்டத்தின் குவாலிஃபய ர் இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் VS குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த சீசனில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வரும் சுப்மன் கில் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை பந்து வீச்சாளர்கள் திணறி வந்தனர்.

11ஓவர் முடிந்து 12வது ஓவரை ஆகாஷ் மத்வால் வீசினார். சுப்மன் கில் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க…. இரண்டாவது பந்தையும்  சிக்ஸர் அடித்தார். மூன்றாவது பதில் சிங்கிள் எடுக்க….  அதே ஓவரில் ஐந்தாவது பந்தை சிக்சருக்கு அனுப்பி…  ஆறாவது பந்தில் சிங்கிள்  எடுத்தார்.

பியூஷ் சாவ்லா வீசிய 13ஆவது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட சுப்மன் கில் சிக்சர் அடிக்க இரண்டாவது பந்தில் இரண்டு ரன், மூன்றாவது  பந்தில் போர் …. 4ஆவது பந்தில் மீண்டும் சிக்ஸ் என   எதிர்கொண்ட 6, 6, 1, 6, 1, 6, 2, 4, 6 9 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில்  5சிக்ஸர் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply