ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற இரு அணிகளும் சமமாக இருந்தது. இந்நிலையில் தற்போது மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்ற நிலையில் பாகிஸ்தான் சிறந்த மண்ணில் ஆஸ்திரேலியாவில் வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது. இந்த தொடரில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவால் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால் ஆஸ்திரேலியா 140 ரன்கள் எடுத்த ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான அணி தொடக்கம் முதலில் சிறப்பாக விளையாடியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 26.5 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் பறிகொடுத்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் முன்னதாக ஆஸ்திரேலியா அணி முன்னதாக பாகிஸ்தானில் அந்த அணியை வீழ்த்திய நிலையில் தற்போது பாகிஸ்தானும் அவர்களின் சொந்த மண்ணில் வைத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்நிலையில் கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவி ஒரு நாள் தொடரை பறிகொடுத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவிடம் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தது. மேலும் இதன் மூலம் 2123 நாட்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் பாகிஸ்தான் வீழ்த்திய நிலையில் இதனை பாக். ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.