6 வருடங்கள் கழித்து காதலனை கரம் பிடித்த பிரபல சீரியல் நடிகை… ட்ரெண்டாகும் போட்டோஸ்..!!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரோஜா சீரியலில் ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து வந்தார். சமீபத்தில் தான் இந்த தொடர் முடிவு பெற்றது. இந்த நிலையில் வேறொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரில் பிரியங்கா நடித்து வருகிறார். பிரியங்காவுக்கு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்று உள்ளது.

அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கு சீரியல் நடிகர் ராகுல் என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது. இப்போது நிச்சயதார்த்தம் முடிந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பிறகு ராகுலை பிரியங்கா திருமணம் செய்து கொண்டுள்ளார். தனது சமூக வலைதளத்தில் பிரியங்கா அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.