6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கனமழை தொடரும் நிலையில், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் மழை வெள்ளத்திற்கு தற்போது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ள நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர், கோழிக்கோடு,காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், பாலக்காடு மற்றும் கோட்டயம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *