உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் நீட் தேர்வு பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் மாணவி ஒருவர் நீட் தேர்வுக்காக படித்து வந்தார். இவரை அந்த மையத்தில் பணிபுரிந்த 2 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நீட் தேர்வுக்காக பயிற்சி பெற வந்த அந்த மாணவியை கடந்த 6 மாதங்களாக இரு ஆசிரியர்களும் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் உயிரியல் ஆசிரியர் பார்ட்டி என அவரின் வீட்டிற்கு மாணவியை அழைத்த நிலையில் அவர் நம்பி சென்றார்.

பின்னர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு வீட்டிலேயே 6 மாதங்கள் வரை அடைத்து வைத்துள்ளதாக அந்த மாணவி புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோவாக ‌ எடுத்ததோடு வெளியில் சொன்னால் குடும்பத்திற்கு ஆபத்து என்பதால் அதனை மறைத்ததாக தெரிவித்தார். மேலும் வீடியோவை காண்பித்து விடுவோம் என்று மிரட்டி மாணவியை அவர்கள் பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் தற்போது தான் இந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.