பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் சென்ற 16-ம் தேதி வெளியான படம் “ஆதிபுருஷ்”. இராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை பிரபல இயக்குனர் ஓம் ராவத் இயக்கி இருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது

இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் வசூல் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகிய 6 நாட்களில் உலகளவில் ரூ.410 கோடியை வசூல் செய்திருக்கிறது. இதை படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருக்கின்றனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.