6 சிக்ஸ் போனாலும் பரவாயில்லை….. இத செய்யனும்….. திட்டமிட்டு சூர்யாவை தூக்கியது மகிழ்ச்சி….. மோஹித் சர்மா சொன்னது என்ன?

டீம் மீட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் விக்கெட் எடுக்க திட்டமிட்டேன். அதன்படியே செயல்பட்டோம் என்று குஜராத் டைட்டன்ஸ் வீரர் மோகித் சர்மா பேட்டி அளித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது தகுதிச் சுற்றில், குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சப்மேன் கில் (129) இந்தப் போட்டியிலும் சதம் அடித்து 3வது ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். குஜராத் அணி 20 ஓவரில் 233 ரன்கள் எடுத்தது.

இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு ஓப்பனிங் எடுபடவில்லை. வதேரா மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் (61) சிறப்பாக ஆடி வந்தார். ஆனால் அவரும் கடைசி வரை நிற்கவில்லை. மோஹித் சர்மாவின் 15வது ஓவரில் அவுட் ஆனார்..

கிரீன் (30), திலக் வர்மா (43) ஆகியோர் சிறப்பாக தொடக்கம் கொடுத்த நிலையில் அவர்களும் அவுட் ஆகினர். எனவே பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. இதனால் பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் விக்கெட்டுகளை இழந்து 18.2 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவின் விக்கெட் உட்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவின் விக்கெட்டுக்கு தான் திட்டமிட்டதாக போட்டிக்குப் பிறகு தெரிவித்தார். மோகித் சர்மா கூறியதாவது:“இன்று 5 விரைவான விக்கெட்டுகளை வீழ்த்தியதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இன்று சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் விளையாடிய விதமும், அவர்கள் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால், போட்டி நழுவிவிடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

ஒருவேளை நான் சூர்யகுமாரிடம் பந்துவீசினால் வேறு எதையும் முயற்சிக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். டீம் மீட்டிங்கில் அனைவரும் விவாதித்தது,  சூர்யகுமார் யாதவுக்கு வித்தியாசமாக பந்து வீசக் கூடாது; இப்படிச் செய்தால் அது அவருக்குச் சாதகமாகப் போகும். பந்துவீச்சு பயிற்சியாளர்கள் எனக்கு அறிவுரை கூறியபோது, ​​சரியான லைன் மற்றும் லென்த்தை வீசினால் போதும். அந்த யோசனை எனக்கு வேலை செய்யும் என்று உள்ளுணர்வு என்னிடம் சொன்னது. அதை செயல்படுத்தினேன். இந்த சூழலில் அவர் என்னை 6 சிக்ஸர்கள் அடித்தாலும் பரவாயில்லை.

அது என் திட்டத்தில் சரியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவருடைய விக்கெட்டை வீழ்த்தினாலும் போட்டி முடிந்துவிடாது, ஆனால் அந்த விக்கெட்டை வீழ்த்தினால் மீண்டும் ஆட்டத்திற்கு வரலாம் என்ற திட்டத்துடன் பந்துவீசினேன். திட்டமிட்டபடி இறுதியில் அவரது விக்கெட் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இந்த மைதானத்தில் கடைசிப் பந்தும், கடைசி விக்கெட்டும் எடுக்கும் வரை ஆட்டம் முடிவடையவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். எனவே இறுதிவரை போராடி வெற்றி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.

Leave a Reply