6 கால்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டி…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வளர்த்த பசுமாடு அதிசயமாக ஆறு கால்கள் உடைய கன்று குட்டியை ஈன்றது. இதுகுறித்து அறிந்ததும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கன்று குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த கன்று குட்டி இறந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கன்று குட்டியை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் கன்று குட்டியின் உடல் புதைக்கப்பட்டது.