6 ஆண்டுகள் கழித்து…. ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்…. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்….!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் தாலுகாவை சேர்ந்த ரகுநாதன் என்பவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு ரகுநாதன் கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் இந்த தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகா கர்ப்பமானார்.

இதனை அடுத்து பிரசவத்திற்காக கார்த்திகாவை தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஒரே பிரசவத்தில் அவருக்கு ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் மூன்று குழந்தைகளையும் வைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உறவினர்களை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.