5ஆவது ஒருநாள் போட்டி : தொடரை கைப்பற்ற இரு அணிகள் தீவிரம்!!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டி 20 போட்டியிலும் 2:0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், அடுத்த 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளும்  2 : 2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து 5-வது ஒருநாள் போட்டி டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று 1:30 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால்  இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.